புதூர் அருகில் தாப்பாத்தி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி புதூர் ஊராட்சி ஒன்றியம், தாப்பாத்தி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்கள். இந்த நிகழ்வின் போது, எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா சமூக பாதுகாப்பு துறை வட்டாட்சியர் ரகுபதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடேசன் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உதவி மின் பொறியாளர் செல்வகுமார் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் நஸிமா புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி
புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பாண்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட பிரதிநிதி சோலைசாமி புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசபாண்டியன் கிளைச் செயலாளர் வள்ளியப்பன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.