தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டி நடைபெற்றது. இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் வட்டார வளர்ச்சி ஆணையர், சிவபாலன் அவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உணவுத் திருவிழாவில் 42 ஊராட்சியில் இருந்த கலந்து கொண்டனர் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் மற்றும் வ.உ.சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அவர்களும் பார்வையிட்டானர். பின்னர் சிறப்பாகக் பலவிதமான உணவுப் பொருள்கள் பற்றிய விளக்கம் அளித்தானர் அதில் முதல் 3 ஊராட்சிக்கு பரிசுகள் வழங்கினார்.
முதல் பரிசு ரூ 2500 மீனாட்சிபுரம் இரண்டாம் பரிசு ரூ.1500 எப்போதும் வென்றான் மூன்றாம் பரிசு ரூ 1000 வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து ஊராட்சிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் அவர்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.