தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முறம்பன் ஊராட்சியில் காலனி தெரு, அருந்ததியர் தெரு, நடுத்தெரு ஆகிய மூன்று தெருக்களில் 20 லட்சம் மதிப்பீட்டில் PMAGY திட்டத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் மூலம் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெரும் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, கிராம உதவியாளர் கணேஷ், ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி, சுடலைமணி, அருண்குமார் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், சேதுராமன், முருகன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.