தமிழ்நாடு முழுவதும் இன்று ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதிய மணல் முட்டைகள் தயார் நிலையில் வைத்தால் , இணைய வழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல் மற்றம் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் பிரேமா தலைமை ஆசிரியர் மேல லட்சுமிபுரம் மற்றும் முப்புலிவெட்டி தலைமை ஆசிரியர் கிருஷ்ணாவேணி ஒட்டப்பிடாரம் கிராம நிர்வாக அலுவலகர் வேளாண்மை துறையின் அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.