தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா விளையாட்டு விழா ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ்
அவர்கள் கொடியேற்றி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித் ஜவகர்லால் நேரு அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி முப்பெரும் விழாவை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது ,
கடந்த கல்வி ஆண்டில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளையும், கடந்த ஆண்டு கலைத்திறன் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கேடயங்களையும் வழங்கினார். முப்பெரும் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும், ஓவிய கண்காட்சியையும்
நடைபெற்றது.
மாணவ மாணவிகளுக்கு சில அறிவுரைகளை யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் வட்டச்சியார் சுரேஷ் அவர்கள் தேர்தல் துணை வட்டச்சியார் கருப்பசாமி அவர்கள் வழங்கினார்கள்: மாணவர்கள் இந்த பருவத்தில் கைபேசி பயன்படுத்துவது குறைத்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டும், அரசு பள்ளியில் படித்தவர்கள் நாங்கள் இப்போது உயர்ந்த பதவிகள் இருக்கிறோம். இந்த விழாவில் வட்டாட்சியர் சுரேஷ் அவர்கள் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வகுமார் அவர்கள்
தேர்தல் துணை வட்டாட்சியர் கருப்பசாமி பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் அவர்கள்
மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி அவைத்தலைவர் சுப்ரமணியன் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.