தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் அரியநாச்சியம்மன் கோவில் முன்பு நடந்தது. முகாமிற்கு ஆரைக்குளம் பஞ்சாயத்து தலைவர் சங்கரி செல்வம் தலைமை தாங்கி கால்நடை சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது நூற்றுக்கு மேற்பட்ட ஆடு, மாடு, நாய் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டன.
மாடுகளுக்கு ஆண்மை நீக்கம், செயற்க்கை முறையில் கருவூட்டல், சினை பரிசோதனை மற்றும் பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்து வழங்கினார். சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பும் விவசாயிகளுக்கு விருதும், கொளு முறையில் வளர்க்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, கால்நடை மருத்துவர்கள் தினேஷ், கௌரிசங்கர், ஜமுனா, பஞ்சாயத்து துணைத் தலைவர் உமா வெள்ளைபாண்டி, முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாலமுருகன், கால்நடை ஆய்வாளர் முருகன், உதவியாளர் பார்வதி உட்பட விவசாயிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.