தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி, அனைத்து வட்ட கிளைகளிலும் மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டு, ஓட்டப்பிடாரம் வட்டக்கிளை கிளை மாநாடு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் கொடி ஏற்றப்பட்டது. அப்போது வருவாய் துறை ஊழியர்களுக்கு பணி தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு புதிய பணியிடங்களை ஏற்படுத்தி அரசாணைகள் வெளியிட வேண்டும், அரசு ஊழியர்களின் சரண்டர் பண பலன்களை ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும், பொது மக்களின் நலன் கருதி தற்போது ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வரும் இடத்திலேயே புதிய வட்டாட்சியர் அலுவலகத்தினை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வட்டக்கிளை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வட்டக்கிளை மாநாட்டில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் ஓட்டப்பிடாரம் வட்ட கிளை தலைவர் கருப்பசாமி, செயலாளர் விக்னேஷ், மாவட்ட தலைவர் சுவாமிநாதன், மாவட்டத் துணைத் தலைவர் சுகுணா, வட்டாட்சியர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புச்செல்வன், பிரிமேன், வட்டச்சியார் சுரேஷ் துணை வட்டச்சியார் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.