சூதாட்டத்தில் தோல்வியடைந்த கணவன் மனைவியை அடகு வைத்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தபோது, ரூ.15 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், சமீபத்தில், சூதாட்டத்தில் தோல்வியடைந்தால், தனது மனைவியை அடகு வைத்தார். பின்னர், அந்த பெண்ணின் அண்ணன் வந்து அவரை காப்பாற்றினார். இதையடுத்து மனைவி, கணவர் மீது போலீசில் புகாரளித்தார்.
மனைவியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோல்வி அடைந்த கணவர் தனது நண்பருக்கு மனைவியை விருந்தாக்க முயற்சித்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உத்தரபிரதேசம் மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன ஒருவர் மது போதைக்கு அடிமையானதாகவும் தினமும் குடித்துவிட்டு சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் குடித்துவிட்டு சூதாட்டம் ஆடிய போது தனது மனைவியை பணயம் வைத்து விளையாடி நண்பரிடம் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து அந்த நபர் தனது நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து ’சூதாட்டத்தில் உன்னை பணயம் உன்னை வைத்து விளையாடி தோற்றதால் தனது நண்பருடன் நீ செல்ல வேண்டும் என்று மனைவிக்கு அழுத்தம் கொடுத்து உள்ளார். ஆனால் மனைவி முடியாது என்று கூற உடனே மனைவியை அடித்து உதைத்த கணவன் நண்பருடன் கட்டாயமாக அனுப்பி வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்து தப்பித்து சென்ற அந்த பெண் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். அந்த பெண்ணின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கணவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-மூன்றாம் கண்.