தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சி சாலை துண்டிப்பு செக்காரக்குடி ஊராட்சியின் தெற்கு பகுதியில் இரண்டு ஓடைகளும் கிழக்கு பகுதியில் ஒரு ஓடையும் உள்ளது. இதில் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு ஓடைகளிலும் மேல் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கிழக்கு பகுதியில் மகிளம்புரம் அருகே உள்ள தரைமட்ட பாலம் சிறிய பாலமாகும் இந்த மூன்று பாலங்கள் அமைந்துள்ள சாலைகளின் வழியாக மட்டுமே செக்காரக்குடி ஊராட்சிக்கு செல்ல முடியும். நேற்று இரவு பெய்த கண மழையால் தெற்கு பகுதியில் உள்ள பாலம் அமைக்கும் பணி நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டது. கிழக்கு ஓடை தரைமட்ட பாவத்திலும் மிக அதிக அளவில் வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் செக்காரக்குடி பகுதியில் இருந்து வெளியே செல்லவோ வெளியில் இருந்து உள்ளே வரவோ இயலாமல் செக்காரக்குடி ஊராட்சி தீவு போல காட்சி அளிக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.