செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் வைத்து செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு புறப்படும் பொதிகை அதிவேக ரயில் வண்டி எண் 12662 மின் இன்ஜின் மூலம் முதன்முதலாக செங்கோட்டையிலிருந்து சென்னை வரை நடுவில் இன்ஜின் மாற்றமின்றி இயக்கப்படுகிறது. மின் இன்ஜின் முகப்பில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் சார்பில் வடிவமைத்துள்ள பேனர் கட்டப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விழாவில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவா் எம்எம்.முரளி, துணைத்தலைவா் நாகேந்திரராவ், செயலாளா் கேஎச்.கிருஷ்ணன், பொருளாளா் சுந்தரம், முன்னாள் நகர்மன்ற தலைவா் எஸ்எம்.ரஹீம் ஆகியோர் முன்னிலைவகித்தனா். மக்கள் தொடர்பு அலுவலா் ராமன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து இந்த ரயிலின் இன்ஜின் லோக்கோ கேபினில் பயணித்த – இஞ்சின் ஓட்டுநா் அப்துல்ஜப்பார், உதவி ஓட்டுநர் பிரபு , திருநெல்வேலி ஏடிஇ ஜெயக்குமார் மதுரை தலைமை லோக்கோ இன்ஸ்பெக்டர் .ஜான்கென்னடி செங்கோட்டை ரயில் நிலைய ஷண்டிங் பைலட்.சுரேஷ்ராஜ் ஆகியோருக்கு பொன்னாடை மற்றும் இனிப்புகளை செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் வழங்கினர் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைத்து கட்சியினர் ரோட்டரி லயன்ஸ் சங்கங்களின் உறுப்பினர்கள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் இராஜகோபாலன், கல்யாணி, ஞானராஜ், ரயில் ஆர்வலா் சுரேஷ்மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை.