கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் செயல்படும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நேற்று முன்தினம் கடையில் இருந்த தங்கம் வைரம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட நகைகளை மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை தனது விசாரனையை தொடங்கியது இதனை தொடர்ந்து கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தப்போது அந்த நபர் முதலில் ஆட்டோவில் உக்கடம் சென்று அங்கிருந்து பஸ்சில் ஏறி பொள்ளாச்சி சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில்
கொள்ளையன் ஆணைமலை பகுதியை சேர்ந்த விஜயக்குமார் என்பதும் அவரின் சொந்த ஊர் தருமபுரி என்பதும் மேலும் அவரின் மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஆணைமலைக்கு சென்ற காவல்துறையினர் கொள்ளையனின் வீட்டில் சோதனை நடத்தினர் சோதனையில் 2 கிலோ 700 கிராம் நகைகளை காவல்துறையினர் மீட்டுனர். காவல்துறை தன்னை நெருங்குவதை அறிந்து கொண்ட கொள்ளையன்
விஜயக்குமார் தலைமறைவானார் இதனை அடுத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் விஜயக்குமாரின் புகைபடத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது புகைப்படத்தில் உள்ள நபரை யாரேனும் பார்த்தால் காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம். மேலும் விஜயக்குமாரை காவல்துறை நெருங்கியுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்,
-M.சுரேஷ்குமார்.