திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த காதர் மகன் முகம்மது அசாருதீன்(35). இவர் திருநெல்வேலியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பேட்டை விவிகே தெரு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்பான திருநெல்வேலி டவுன் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வம்(39), பாளையங்கோட்டை மகாராஜன் நகர் சிவந்திபட்டி நடுத்தெருவைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் மூர்த்தி என்ற கார்த்திகேயன்(24), பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த துரை மகன் மந்திரமூர்த்தி(25), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் சபரிமலை(23) ஆகிய 4 பேர் நேற்று ஓட்டப்பிடாரம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் 4 பேரையும் நவ.21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.