கோவை மாவட்டம் வால்பாறை, தர்மபுரி, பாலக்கோடு, கோவை மதுக்கரை, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதி பொதுமக்களை அச்சுறுத்தியும் பயிர்களை தேசப்படுத்தியும் வந்த மக்னா யானையை கடந்த ஜூலை மாதம் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு வால்பாறையை அடுத்துள்ள சின்ன கல்லாறு வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரேடியோ காலர் கருவி மூலம் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் மக்னா யானை வால்பாறை வில்லோனி பகுதிக்குட்பட்ட நாகமலை சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்ததை நேற்று மதியம் வனப் பணியாளர்கள் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும் போது மலையில் பாறை சரிவில் இருந்து விழுந்து யானை உயிரிழந்திருக்கலாம் யானையின் உடலை இன்று பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
வால்பாறையிலிருந்து,
-திவ்யகுமார், P.பரமசிவம்.