முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, எட்டயபுரத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் எம்எல்ஏ G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நகர முக்குலத்தோர் சங்கம் இளைஞரணி மற்றும் இராமனூத்து, ஈராச்சி, கசவன்குன்று, இளம்புவனம், தலைகாட்டுபுரம் சுற்றுவட்டார முக்குலத்தோர் இணைந்து நடத்திய ஸ்ரீமான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமங்கனாரின் 116-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, எட்டயபுரத்தில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
பெரிய மாடு சின்ன மாடு என 2 பிரிவுகளில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயம் எட்டயபுரம் இருந்து விளாத்திகுளம் சாலை வரை நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு 2 பவுன் தங்க செயின் சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு 1 பவுன் தங்க செயின் வழங்கப்பட்டது. நுழைவு சீட்டு கட்டணம் ரூபாய் 3000 நிர்ணயம்.
இந்த நிகழ்வின் போது கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நகரம் முக்குலத்தோர் சங்கத்தலைவர் கார்த்திக்பாண்டியன் இராமனூத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் ஈராச்சி செந்தில்வேல் பாண்டி வார்டு செயலாளர் மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன் மணிகண்டன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M.R.முனியசாமி அருள்சுந்தர் மயில்ராஜ் கசவன்குன்று பாலமுருகன் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.