கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாவட்ட அளவிலான தடகளப்போட்டி நேரு ஸ்டேடியத்தில் வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது.
இப்போட்டியில், 30 வயதுக்கு மேற்பட்டோர் முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர் வரை, 11 வயது பிரிவின் அடிப்படையில் ஆண், பெண் ஆகியோருக்கு, 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1,500மீ., 3,000மீ.,நடையோட்டம், தடைதாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில், வெற்றி பெறுவோர், தமிழ்நாடு மாநில அளவில் நடக்கவுள்ள மூத்தோர் தடகளப்போட்டியில் பங்கேற்க, தேர்வு செய்யப்படுவர். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்,
94425 82787 , 98947 93787 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.