கோவையில் முதல் முறையாக மூன்று நாட்கள் நடைபெறும் “ஜெர்மன் உணவு திருவிழா”வின் துவக்க விழா நிகழ்ச்சியில் உணவு விருந்துடன் இசை விருந்து படைத்த ஜெர்மானியர்கள் இழை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
கோவையில் முதல் முறையாக “ஜெர்மன் அக்டேபர் பெஸ்ட்” எனும் உணவு திருவிழா துவ்னக்கியுள்ளது. மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர், கல்கத்தா உள்ளிட்ட முதன்மை நகரங்களில், பாரம்பரியமாக கொண்டாடப்படும் உணவு விழாக்களை போல “ஜெர்மன் அக்டேபர்பெஸ்ட்” என்பது ஜெர்மனியின் உணவு விழா.
இந்த விழா கோவையில் இன்று முதல் 26″ம் தேதி வரை 3″ நாட்கள் நடபெறுகிறது. நேற்றும் இன்றும் நாளையும் மாலை 5.00 மணி முதல் இரவு 11 மணி வரையும் 26″ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையும் பின்பு மாலை 5.00 மணி முதல் இரவு 11 மணி வரையும் நடைபெறும். ஜெர்மன் மொழி மற்றும் கலாச்சாரத்தை உணர்த்துவதற்காக நடைபெறும் இந்த விழாவிற்கென ஜெர்மன் சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் கர்ட் ஹென்கென்ஸ்மியர் தலைமையில் உணவு தயாரிக்கப்பட்டிருக்கின்றன. Mசிக்கன், மட்டன், போர்க் உள்ளிட்ட அசைவ உணவுகள் ஜெர்மானிய முறைப்படி தயாரித்து ருசிக்க அரங்கில் வைகப்பட்டுள்ளன.
வாய்க்கு ருசியுடன் வயிற்றுக்கு உணவளித்த விழா ஏற்பாட்டாளர்கள், செவிக்கு விருந்தளிக்க “ப்ளெச்ஸாவ்க்” என்ற ஜெர்மன் இசைக்குழுவினர் பாட்டு பாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். ஜெர்மன் – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்தவும் ஜெர்மனி கலாச்சாரத்தை இந்தியர்கள் அறிந்து கொள்ளவும் அங்குள்ள வேலை வாய்ப்பினை பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த உணவு திருவிழா நடத்தப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.