கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, குப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில் வனப் பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை மற்றும் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் குப்பனுார், அருகில் உள்ள முள்காட்டிற்குள் புகுந்தது.
இந்நிலையில் மதுக்கரை வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்த வனத்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ட்ரோன் மூலம் யானைகளை கண்காணித்த வனத்துறையினர் இரவில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில் தற்போது அந்த யானைகள் மதுக்கரை வனசரகத்தில் இருந்து கோவை வனசரகத்திற்குள் வந்துள்ளது. தற்போது மருதமலை பகுதியில் உள்ள யானை முகடு பகுதியில் சுற்றி வருவதால் கோவை வனசரக வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.