Trending

வனப் பகுதிகளில் மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதி அடர்ந்த வனப் பகுதிகள் நிறைந்த இடமாகும். இந்த வனப் பகுதியில் யானைகள், கரடிகள், மான்கள்,சிங்கவால் குரங்குகள், காட்டு எருமைகள், காட்டு மாடுகள், வரையாடுகள் உட்பட வன உயிரினங்கள் பலவும் வாழ்ந்து வருகின்றன. இவை அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது வனங்களில் உள்ள மரங்கள் தான். மரங்கள் அதிகமாக இருந்தால் தான் மழைப்பொழிவு நடக்கும் அப்பொழுதுதான் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் வனத்திற்குள்ளேயே கிடைக்கும்.

வனப்பகுதியில் வறட்சி ஏற்படும் சூழ்நிலையில்தான் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவுக்காகவும் குடிநீருக்காகவும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருகின்றது இதனால் மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்று உள்ள சூழ்நிலையில் தற்பொழுது அரசு அனுமதி உடன் சிலர் வனத்தில் உள்ள மரங்களை வெட்டி வெளியில் கொண்டு செல்கின்றனர் இதனால் வனத்தில் கடும் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று வன உயிரியல் ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் அச்சமடைந் துள்ளனர்.

மரங்கள் இருந்தால் தான் மழைப்பொழிவு உண்டாகும் அப்பொழுதுதான் வனப்பகுதி பசுமையுடன் காட்சியளிக்கும் வன உயிரினங்களுக்கு தேவையான அனைத்தும் வனத்துக்குள் கிடைக்கும். https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மழை வரத்து குறையும் காலங்களில் எல்லாம் வனங்களுக்குள் வறட்சி ஏற்பட்டு புற்கள் கூட காய்ந்து போகும் நிலைமைக்கு சென்று விடுகிறது இது போன்ற சமயங்களில் சில இடங்களில் காட்டுத் தீ ஏற்படுகிறது இதனால் வனத்தில் உள்ள பல அரிய வகை மூலிகை செடிகளும, மரங்களும் அழிந்து போகின்றன எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வனத்தில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி அளிக்க கூடாது என்று வன உயிரின ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பசுமையை நேசிக்கும் அனைத்து உயிரினங்களின் சார்பாகவும் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp