கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சாலையின் ஓரங்களில் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது மேலும் ஒளிரும் பட்டைகள்(Reflecting sticker) ஒட்டப்பட்டு உள்ளன இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையின் ஓரப்பகுதியை பற்றி அறிந்து கொள்ளவும் மேலும் பணி மூட்ட காலங்களில் வாகனங்கள் சாலையை விட்டு இறங்கி விபத்து ஏற்படாமல் இருக்கவும் அமைக்கப்பட்ட இந்த சோலார் விளக்குகள் தற்பொழுது முறையான பராமரிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகளுக்கு பயன் இல்லாமல் உள்ளது மேலும் ஒரு சில இடங்களில் மர்ம நபர்களால் இந்த சோலார் விளக்குகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
மலைப்பகுதியில் சாலைகளில் உள்ள வளைவுகள் மற்றும் ஓரப்பகுதிகளின் எச்சரிக்கை அறிவிப்புகளுக்காக வைக்கப்பட்டுள்ள இந்த சோலார் விளக்குகள் பழுதடைந்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் சில சமூக விரோத கும்பல்கள் இந்த சோலார் விளக்குகளை சேதப்படுத்துவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் எனவே சாலையின் ஓரங்களில் பழுது ஏற்பட்டு செயல்படாமல் உள்ள சோலார் விளக்குகளை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் சோலார் விளக்குகளை சேதப்படுத்த முடியாதவாறு அதற்கு கம்பி வளை போன்று பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
–சி.ராஜேந்திரன். மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.