வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான தேர்தல் பார்வையாளர் சங்கர், வரும், 25ல் கோவையில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் ஆய்வு செய்து, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். கோவை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக். , 27ல் வெளியிடப்பட்டது. 2024, ஜன. , 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, 4, 5 தேதிகளில் நடத்திய முகாமில், 34 ஆயிரத்து 921 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாம் கட்ட முகாம், வரும் 18, 19ம் தேதிகளில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 13ம் தேதி (திங்கள்) அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கு ஈடாக, 18ம் தேதி (சனி) வேலை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் பலரும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக இருப்பதால், அவர்கள் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இது, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம், 25 (சனி) மற்றும், 26ம் தேதிக்குஞாயிறு) மாற்றப் பட்டிருக்கிறது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.