கோவை மாவட்டம் வால்பாறையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் உலகம் முழுவதிலும் 16 நாட்கள் நடக்க W S A F அமைப்பு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் வால்பாறையில் தொடக்க விழாவாக இன்று நகர மன்ற உறுப்பினர் அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் W S A F தென்மண்டல அமைப்பின் மேலாளர் ஏ ஜூலியா மற்றும் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் வால்பாறை கீழ் பேருந்து நிலையத்திலிருந்து மெயின் ரோடு வழியாக பெண்களுக்கு எதிராக வன்முறை சூழல்களை ஒழிக்க இப்பகுதியில் உள்ள பெண்கள் அமைப்புகள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாக இவ் அமைப்பின் தென் மண்டல மேலாளர் ஏ ஜூலியா கூறுகையில் உலகம் முழுவதும் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக பெண்களுக்காக வன்முறையில் ஈடுபவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உறுதுணையாக இருப்போம் அதுமட்டுமல்லாமல் பெண்கள் வேலை செய்யும் இடங்களிலும் பணி பாதுகாப்பு வழங்கவும் அதற்கான சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களை பாதுகாப்போம் பெண்கள் பாலியல் துன்புறுத்து செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க எடுக்கவும் எங்கள் நோக்கம்.
பெண்களை வேலை செய்யும் இடங்களிலும் பொது இடங்களிலும் குடும்பத்திலும் மதிப்பாக நடத்த வேண்டும் துன்புறுத்தல். இல்லாமல் இருப்பதற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று கூறினார் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரமசிவம்.