கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள அக்காளை எஸ்டேட் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.
இதனால் அந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படும் வேளையில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதைக் கண்டு பொதுமக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
குடிநீர் பற்றாக்குறை உள்ள வேளையில் இவ்வாறு தண்ணீர் வீணாவது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை பகுதியில் இருந்து கருமலை எஸ்டேட் செல்லும் பகுதி வரை சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
திவ்யகுமார்.