கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள வெள்ளை மலை பகுதியிலிருந்து வால்பாறைக்கு வரக்கூடிய அரசு பேருந்து மதியம் 2.30 மணி அளவில் கூழாங்கல் அடுத்து நடுநிலை நல்லக்காத்து சந்திப்புக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும்போது, பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பேருந்து ஓட்டுனர் மிக சதுர்த்தியமாக செயல்பட்டு பெரும் விபத்தில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றி உள்ளார். பேருந்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட்ட ஓட்டுனரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது. பேருந்து பிரேக் பிடிக்கவில்லை என்றதும் ஓட்டுனர் மிக கவனமாக செயல்பட்டு அனைவரையும் பாதுகாப்புடன் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் காப்பாற்றி உள்ளார்.
பேருந்து ஓட்டுனரின் இந்த செயலை அப்பகுதியில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன், திவ்யகுமார்.