கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சேர்ந்த பழங்குடியின மக்கள்
02-11-2023 அன்று உயர்திரு பழங்குடியினர் நலம் இயக்குனரை நேரில் சந்தித்து வால்பாறை பழங்குடியின மக்கள் வீடு கட்டுவதற்கான மனுவும் டாப்ஸ்லிப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை அவர்களுக்கே கட்டுவதற்கும் மற்றும் காடர் மலை, மலசர், முதுவர் மலசர் இன பழங்குடி மக்களை அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடிகளாக கருதி PVTGS (Development of particularly Vulnerable Tribal Groups)ல் இணைத்து தமிழ்நாடு அரசே அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் மனு கொடுக்கப்பட்டது. அதனை கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஏற்றுக்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை பகுதி பழங்குடியின மக்கள் சார்பாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
திவ்யகுமார்.