கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள புதுதோட்டம் எஸ்டேட் அருகில் உள்ள தேயிலை தோட்டம் பாரலை என்ற பிரிவு ஆலமர பஸ் ஸ்டாப் அருகில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன இதனை அவ்வழியே சென்ற சுற்றுலாப் பயணிகள் திரண்டு நின்று பார்த்து ரசித்தனர் மேலும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
அதேபோல் அரசு அறிவியல் கல்லூரி வளாகம் அருகே பகல் நேரங்களில் கழுதை மான்கள் உணவு தேடி சுற்றி வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் நேரங்களில் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து செல்கின்றன மேலும் இரவு நேரங்களில் சிறுத்தை புலி மற்றும் கரடி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே உலா வருகின்றன.
இதனைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர் மேலும் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன், திவ்யகுமார்.