தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கே துரைச்சாமிபுரத்தில் 50 லட்சம் மதிப்பிலான கரிமூட்டம், மழையில் கரைந்து ஓடியதால் கண்ணீர் விட்டு கதறும் தம்பதியர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே k. துரைசாமிபுரத்தில் லட்சுமணன் வயது 57 இவர் மனைவி குட்டியம்மாள் இருவரும் இதே கிராமத்தில் பல வருடங்களாக கரிமூட்டம் தொழில் செய்து வருகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் இவர்கள் வட்டிக்கு பணம் வாங்கியும் இவர் நகைகளை அடகு வைத்தும் அதிக முதலீடு செய்து விறகுகள் மற்றும் தூர் கட்டைகளை வாங்கி வந்து சில மாதங்களாக கரிமூட்டம் அமைத்து இருந்தார்களாம். கடந்த 29ஆம் தேதி பெய்த காற்றுடன் சேர்ந்து கனமழை பெய்தது சில மணி நேரத்தில் 17 கரி மூட்ட குவியலும் உபகரணங்கள் சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் வெள்ள நீர் அடித்து சென்றதை கண்டு மிகவும் மனம் வருந்தி 50 லட்சம் முதலீடு இழந்து விட்டதாக கண்ணீர் விட்டு கதறியதை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி வி மார்க்கண்டயன் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் 50000 உதவித்தொகையும் தைரியமும் கூறினர். மற்றும் அடுத்து அரசாங்கத்தால் உதவி பெற்று தருவதாகவும் கூறி சென்றார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் மற்ற அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை.