விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் தந்தை பெரியார், அம்பேத்கர் முழு உருவ சிலை திறப்பு விழா!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேல் மாந்தை கிராமத்தில் கடற்கரை சாலையில் உள்ள பழனிச்சாமி என்பவர் இல்லத்தில் தந்தை பெரியார் முழு உருவ சிலையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். ஒட்டப்பிடாரம் எம் எல் ஏ சண்முகையா சிலை அமைய காரணமாக இருந்து முதலாம் ஆண்டு புகழ் வணக்கம் செய்யப்படும் பெரியார் தொண்டர் காலாடி அவர்களின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.

பின்பு உரையாற்றிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பெரியார் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க பெண்களுக்கு கல்வி முக்கியம் எனவே கரண்டியை தூக்கி எரி புத்தகத்தை எடுத்து படி என்று கூறி பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க அரும்பாடுபட்டார் மற்றும் மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை என பெரியார் கூறிய அனைத்தும் தற்பொழுது சட்டத்தில் நடைமுறையில் உள்ளது என்று பேசினார்.

இந்நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி பால்பாண்டியன், மாவட்ட மீனவர் அணி பெப்பின் காகு, மாவட்ட வர்த்தக அணி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மல்லிகாமுத்தையா சாமி, சக்கம்மாள் ராமர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் கனகராஜ், சங்கிலி கருப்பசாமி , ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர் புனிதா , சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் தர்ம நேச செல்வின்,

தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர்கள் பாரதிதாசன், கிளைக் கழகச் செயலாளர்கள் கருப்பசாமி, பரமசிவம், வெள்ளைச்சாமி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், வைகோ உதவியாளர் செல்வராஜ், கலை இலக்கிய அணி மாரியப்பன், மாணவரணி அமைப்பாளர் முனியசாமி, வைப்பார் சன்னாசி, சமூக வலைதள பொறுப்பாளர் கரன் குமார் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

விளாத்திகுளம் நிருபர்,

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp