தூத்துக்குடி: வேளாண்மைத்துறை மூலம் அக்காநாயங்கான்பட்டி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமர மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகில் அக்காநாயங்கான்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு விழிப்புணர்வு மூகாமில் தூத்துக்குடி மாவட்ட பயிர் காப்பீடு திட்ட வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி தலைமையிற்று புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து விரிவாக கூறினார்.
அதில் இயற்கை இடற்படுகளில் இருந்து பயிர்களை காத்து கொள்ள விவசாயிகள் கண்டிப்பாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றும், உளுந்து பாசி பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி வரும் 15.11.2023, பிரிமியம் கட்டணம் ஏக்கருக்கு 210 ரூபாய் என்றும், அருகில் உள்ள பொது சேவை மையத்தில் தேவையான ஆவணங்கள் மற்றும் VAO அடங்களுடன் சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டர்கள், இம் மூகாமில் வேளாண்மை அலுவலர் சிவகாமி துணை வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் உதவி வேளாண்மை அலுவலர் மாயாண்டி,கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் நோக்கம்:
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மத்திய மாநில அரசுகளின் மானியத்துடன் 2023-24 ராபி பருவத்திற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் முக்கிய நோக்கம் இயற்கை இடர்பாடுகள் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க செய்து அவர்களின் விவசாயத்தில் நிலைபெற செய்தல், நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல், விவசாய பெருமக்களே உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாத்து உணவு பாதுகாப்பிற்கு விவசாயிகளுக்கு கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்து வேளான் வளர்ச்சி மேம்படுத்தல் ஆகிய பணிகள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.