வேலூர் மாவட்டத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஒன்றாக இணைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே அறையில் காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு பேரிடர் மேலாண்மை கட்டுப்பாடு அறை, தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்ட சுமார் 956 கேமராக்களும், காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள 270 கேமராக்கள், காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை இங்கிருந்தே கண்காணிக்க இயலும். இதுதவிர மாவட்ட எல்லைப்பகுதிகள், சோதனை சாவடிகளையும் இங்கிருந்து கண்காணிக்க முடியும். நடமாடும் காவல் கட்டுப்பாடு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், திருவிழாக்கள், பொதுமக்கள் கூடும் இடங்களும் இந்த மையத்துக்கு நேரலை செய்யும் வசதியும் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இதில் புதிதாக வாகன விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் வாகன பதிவெண்களை வைத்து முக்கிய சாலைகளில் நிறுவியுள்ள 93 கேமராக்கள் மூலம் கண்டறியலாம். மேலும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 83 கேமராக்கள் உதவியுடன் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை புகைப்படத்தை ஒப்பீடு செய்து உடனே எச்சரிக்கை எழுப்பும் தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்கள் கண்டறிந்து அந்த குற்றங்களை தடுக்க ரோந்து நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
இந்த கட்டுப்பாடு மையம் மூலம் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுதல், விபத்து இல்லா சீரான போக்குவரத்தினை உறுதி செய்தல், குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், ரோந்து வாகன செயல் திறனை அதிகரித்தல், அவசர அமைப்புக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுதல், கைதியை அழைத்து செல்லும் காவல் வாகனத்தின் இருப்பிடத்தை கண்காணித்தல், பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த வேலூர் சரக காவல்துறை கட்டுப்பாட்டு அறையை வேலூர் சரக டிஐஜி முனைவர் M.S.முத்துசாமி இ.கா.ப அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார் அவருடன் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உடன் இருந்தார்.
நாளை வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.