தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, உறுப்புக் கல்லுாரிகள், இணைப்புக் கல்லுாரிகளில் டிப்ளமோ படிப்புகளில், பல இடங்கள் காலியாக உள்ளன. இவ்விடங்களை நிரப்ப, பல்கலை திட்டமிட்டுள்ளது. இதற்கான உடனடி சேர்க்கை வரும், 6ம் தேதி நடத்தப்படும் என நேற்று அறிவிக்கப் பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் அன்றைய தினம், வேளாண் பல்கலை அண்ணா அரங்கில் நடக்கும் சேர்க்கையில் பங்கேற்கலாம். சேர்க்கையில் இடம் கிடைத்த மாணவர்களிடம் மட்டுமே, கலந்தாய்வுக் கட்டணம் வசூலிக்கப்படும். டிப்ளமோ கலந்தாய்வில் ஏற்கனவே பங்கேற்காதவர்கள், இடம் கிடைத்து சான்றிதழ் சரிபார்ப்பை தவறவிட்டவர்கள், கல்லுாரியில் சேராதவர்கள் பங்கேற்கலாம். மாணவர் சேர்க்கை பெற்று, இடைநிறுத்தம் செய்தவர்கள் உடனடி சேர்க்கையில் கலந்து கொள்ள முடியாது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவர்கள், எஸ். சி. , எஸ். சி. ஏ. , எஸ். டி. , பிரிவு மாணவர்கள், ரூ. 100, மற்றவர்கள் ரூ. 200 கட்டணமாக செலுத்த வேண்டும். உடனடி சேர்க்கையில் பங்கேற்ற, மாணவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்படும். இடம் கிடைத்த மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட சேர்க்கை கட்டணம் ரூ. 5, 000 செலுத்தி, கல்லுாரியில் சேரலாம். காலியிடங்களுக்குரிய அட்டவணை, http: //tnagfi. ucanapply. com இணையதளத்தில், நவ. , 5ம் தேதி வெளியிடப்படும். மேலும் விபரங்களுக்கு, 94886 35077, 94864 25076 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.