ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்பது சோதனை சாவடிகளுக்கான கேமரா கட்டுப்பாட்டு அறையை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 9 சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் தாமரைப்பாக்கம், சீக்கராஜபுரம், அரும்பாக்கம், ரெட்டை குளம், புது கேசவபுரம், பள்ளூர், பில்லாஞ்சி, பொன்னியம்மன் பட்டறை, சில்வர் பேட்டை என மொத்தம் ஒன்பது சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் தல 2 அதிநவீன தானியங்கி கேமராக்கள் என மொத்தம் 18 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன அதன் கட்டுப்பாட்டு அறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
மேலும் திமிரி மற்றும் அவளூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமரைப்பாக்கம் மற்றும் சங்கர பாளையம் சத்திரம் (பொன்னியம்மன் பட்டறை) ஆகிய சோதனை சாவடி பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன இந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் புதிய சோதனை சாவடி கட்டிடங்கள் திறப்பு விழா ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவர்கள் பங்கேற்று கட்டுப்பாட்டு அறை மற்றும் இரண்டு புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்து பயன்பாட்டி கொண்டு வந்தார்.
தொடர்ந்து மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இதில், துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் (மாவட்ட குற்றப் பிரிவு) உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.