வேலூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேலூர் சரக டி. ஐ.ஜி முனைவர் திரு. முத்துசாமி அவர்கள் தெரிவித்தார்.
வேலூர் பஸ் நிலையம் பின்புறம் டோபிகானா பகுதியில் சந்தேக நபர்களை கண்காணிக்க மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு சம்பவங்களை குறைக்கவும் குற்றங்களை விரைந்து கண்டுபிடிக்கவும் பொதுமக்களின் உதவியுடன் காவல்துறை சார்பாக 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கேமராக்களை பயன்பாட்டிற்கு டிஐஜி முத்துசாமி அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் உடைமை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர் இதனை ஏற்று பஸ் நிலையத்தில் புதிய புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த புறக்காவல் நிலையத்தை டிஐஜி முத்துசாமி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் எஸ் பி மணிவண்ணன், ஏ டி எஸ் பிக்கள் பாஸ்கரன், கோடீஸ்வரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், நாகராஜ், ரவி உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் டிஐஜி முத்துசாமி அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது;
புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர் அவர்களது உடமைக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் புற காவல் நிலையத்தில் பணியாற்ற உள்ளார்கள் குற்ற சம்பவங்களை தடுக்கவும், ஏற்கனவே நடைபெற்ற குற்றச்செயல்களை கண்டுபிடிக்கவும் காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம் நடைபெறுவது தெரிய வந்தால் புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். புதிய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் விதமாக 28 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய வேலூர் சரகத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் ,அங்காடி நிலையங்கள், போன்றவற்றில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. மேலும் மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் எஸ்பி அலுவலகத்தில் இருந்து கண்காணிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.