தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார்.
அத்திமரப்பட்டி, காலாங்கரை, பெரியநாயகிபுரம், புதியம்புத்தூர், மேலமடம், செவல்குளம், ஓட்டப்பிடாரம் கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாய் பகுதியை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த டாக்டர். கிருஷ்ணசாமி கூறியதாவது, ” மாநில அரசின் தவறுகளால் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை குளங்களை சரியாக பராமரிப்பு செய்யாததால் குளங்கள் உடைந்துள்ளது.
ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாய் உடைந்து வடக்கு ஆவரங்காடு, தெற்கு ஆவரங்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, யூனியன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து குளங்களை முறையாக பராமரிப்பு செய்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கும் உரிய இழப்பீடு அறிவிக்கவில்லை.
வாழை, நெல், உளுந்து, பாசிப் பயறு, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் மழையில் அழிந்து போய்விட்டன. வாழைக்கான செலவே 32 ஆயிரம் ஆகிவிடும். மழை வெள்ளத்தில் முறையான ஆய்வு செய்யாமல் கண்துடைப்புக்காக பயிர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்கள்.
வெள்ள நிவாரணம் 6 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தினால் தான் முறைகேடுகள் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கும். வெள்ளப் பாதிப்பு குறித்தான கணக்கெடுப்புகளும் எந்தவித பாகுபாடுகளும் இல்லாமல் நடத்த வேண்டும்.” இவ்வாறு டாக்டர்.க. கிருஷ்ணசாமி கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநிலச் செயலாளர் வி கே அய்யர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் எம் செல்லத்துரை, தூத்துக்குடி மாவட்டம் வழக்கறிஞர் டி.ரமேஷ்குமார், தூத்துக்குடி மாநகரம் ஒன்றியம் எஸ் ஆர் ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஒன்றியம் மாரிமுத்துகிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர் ரவி, ஒன்றியம் பாஸ்கர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.