கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தில் அரசு மதுபான கடைகளில் ஆறரை கோடி ரூபாய்க்கு (6½ கோடி) மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கட்டப்பனை அரசு மதுபான கடையில் 83 லட்சத்து 76 ஆயிரத்து 720 (8376720 லட்சம்) ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடத்தை விட ஒன்றரை கோடி ரூபாய் (1½கோடி) அதிகமாக இந்த வருடம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.மூன்-வருடத்தை விட அதிகமான விற்பனை தான் இந்த வருடம் மாவட்டத்தில் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளுடன் கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளிலும் அதிகமான விற்பனை நடந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 18 மதுபான கடைகளில் கிறிஸ்துமஸ்த்திற்கு முந்தைய தினம் 36118780 ரூபாய் விற்பனையும் கிறிஸ்துமஸ் தினத்தில் 27068990 ரூபாய் விற்பனை நடந்துள்ளது.தினங்களில் மொத்தமாக 63187770க்கு மதுபான விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகமாக விற்பனை நடந்தது கட்டப்பயனையில் தான் 83 லட்சம் விற்பனை நடந்துள்ளது. அருகில் உள்ள தடையம்பாட்டில் 48 லட்சம் ரூபாய்க்கு மதுபான விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொக்குப்பாளத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் 43 லட்சம் விற்பனை நடந்துள்ளது. நான்காம் இடத்தில் தொடுபுழாவில் 43 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடுபுழாவிலுள்ள அவுட்லைட்டில் 33 லட்சம் ரூபாய்க்கும் கரிமன்னூரில் 30 லட்சம் கரி மச்சத்தில் 23 லட்சம் மூணாறில் முதல் அவுட்ரேட்டில் 13 லட்சம் ரூபாய்க்கும் இரண்டாவது அவுட்ரேட்டில் 32 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. குஞ்சுதண்ணீரில் 30 லட்சம் ரூபாய்க்கும் கோவில்கடவில் 21 லட்சம் ரூபாய்க்கும் ராஜாக்காட்டில் 40 லட்சம் ரூபாய் விற்பனை நடந்துள்ளது. பூப்பாறையில் 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. ராஜகுமாரியில் 30 லட்சம் ரூபாய்க்கும் சின்னக்காணலில் 12 லட்சம் ரூபாய்க்கும் உப்புதரையில் 37 லட்சம் ரூபாய்க்கும் வாழைக் குளத்தில் 33 லட்சம் ரூபாய்க்கும் மதுபான விற்பனை செய்யப்பட்டுள்ளது மிகவும் குறைந்த அளவில் விற்பனை நடந்தது சின்னக்காணல் தான் 1237040க்கு சின்னகானலில் மதுபான கடையில் விற்பனை நடந்துள்ளது. புது வருடத்திற்கும் இதே விற்பனை நடக்கும் என்று நம்பிக்கையில் பீவரேஜஸ் கார்ப்பரேஷன் (Beverages corporation)எதிர்பார்ப்பில் உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.