கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் அடுத்து உள்ள சோலையார் டேம் பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன இந்த மின் கம்பிகளுக்கு மிக அருகாமையில் மரங்கள் வளர்ந்து அதனுடைய கிளைகள் கம்பிகள் மீது உரசும் படியான சூழ்நிலையில் உள்ளது.
மரக்கிளை காற்றில் அசையும் பொழுது உயர் மின்னழுத்த கம்பிகளின் மீது உரசுவதால் பட்டாசு வெடிப்பது போன்று சப்தம் எழுகிறது இதனால் அதன் அருகே செல்லவே மிகவும் அச்சமாக உள்ளது. எனவே உடனடியாக மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன். மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.