கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது மிகச் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து சுற்றுலா தளங்களை பார்வையிட்டு செல்கின்றன விடுமுறை தினங்களில் இன்னும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்து செல்கின்றன இதன் காரணமாக வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
வால்பாறை பகுதியை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன இந்த எஸ்டேட் பகுதிகளில் விவசாய பணிகளுக்காக டிராக்டர் வாகனம் வைத்துள்ளார்கள். இந்த டிராக்டர் வாகனங்கள் சில நேரங்களில் நெரிசல் மிகுந்த நகர் பகுதிக்குள் வந்து பணியாளர்களை ஏற்றி செல்லுதல் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றன சில சமயங்களில் டிராக்டரில் கொண்டு செல்லப்படும் சாக்கு மூட்டைகள் கீழே விழுந்து விடுவதும் உண்டு இது போன்று விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டிராக்டர் வாகனங்கள் நகருக்குள் வருவதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மேலும் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வால்பாறைக்கு வரும் வாகனங்கள் வால்பாறை நகர் பகுதியில் ஓரங்களில் நிறுத்தப்படும் பொழுது அந்த பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அது போன்ற சமயங்களில் இந்த டிராக்டர் வாகனங்கள் அந்தப் பகுதியை கடந்து செல்ல நெடு நேரம் எடுத்துக் கொள்கின்றன இது போன்ற சமயங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏதாவது விபத்தினால் காயம் அடைந்தவர்களையோ அல்லது திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களையோ அழைத்துச் செல்லும் பொழுது அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாமல் மிகவும் தாமதம் ஆகின்றது. எனவே விவசாய பயன்பாட்டிற்காக வைத்துள்ள டிராக்டர்களை கொண்டு ஆட்களை ஏற்றி செல்லுதல் மற்றும் பாதுகாப்பின்றி பொருட்கள் மற்றும் சாக்கு மூட்டைகள் கொண்டு செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் எஸ்டேட் நிர்வாக டிராக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி வாகன ஓட்டுநர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.