ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் படகின் மூலமாக,
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள்
நேரடியாக சென்று வெள்ளநீர் சூழ்ந்துள்ள வீடுகளில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் உணவு பொருட்கள் (ம) குடிநீரினை மீட்புக்குழுவினர் மற்றும் மாப்பிள்ளையூரணி திமுக இளைஞரணி உதவியோடு வழங்கினார்கள்.
மாப்பிளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், ரவி, பாரதி, மாவட்ட பிரதிநிதி ஜோசப்மோகன், மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.