தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் தரைத்தளம் முதல் தளத்துடன் ரூபாய் 4.94 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படுகிறது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் கட்டப்பட வேண்டும் என கடந்த வருவாய் துறை வைரவிழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல கட்டிடத்தின் தன்மையும் மிகவும் மோசமாக இருந்தது சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரும் குரல் கொடுத்து வந்தனர்.
இந்த கட்டிடத்தில் வருவாய் அலுவலகம் புள்ளியியல் துறை ரேஷன் துறை அனைத்தும் இந்த ஒரே கட்டடத்தில் இயங்கிவருகிறது. தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் சமூக அலுவலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் அதை ஏற்று 4.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதான் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுபடுவதை அடுத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, சிவபாலன் மற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.