ஓட்டப்பிடாரம் அருகே நகை மோசடி வழக்கில் குற்றவாளிக்கு ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு.!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்.புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரது மனைவி உலகாண்ட ஈஸ்வரி அவரது உறவினரான கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் முத்துராமலிங்கம் என்பவர் பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி கடந்த 14.04.2021 அன்று உலகாண்ட ஈஸ்வரி வீட்டில் வைத்து முத்துராமலிங்கம் பரிகார பூஜை செய்து உலகாண்ட ஈஸ்வரியின் 6 ½ பவுன் தங்க நகைகளை துணியால் மூடப்பட்ட ஒரு பாத்திரத்தில் வைக்க சொல்லி அவருக்கு தெரியாமல் அந்த தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் ஒரு கல்லை வைத்து விட்டு பரிகார நாட்கள் முடியும் வரை பாத்திரத்தை திறக்க கூடாது என்று கூறி தங்க நகைகளை மோசடி செய்து ஏமாற்றிய வழக்கில் நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரணை செய்த அப்போதைய நாரைக்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. தர்மர் புலன் விசாரணை செய்து கடந்த 13.10.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி த ஜெயந்தி இன்று முத்துராமலிங்கம் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp