தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஸ்ரீ குலசேகரநாதர் திருக்கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு.! ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஸ்ரீ குலசேகரநாதர் திருக்கோவிலில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டியும் அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது .அப்போது ஸ்ரீ குலசேகர நாதருக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது . தொடர்ந்து ஆலயத்தில் உள்ள பிரகாரங்களில் நிர்வாகிகள் வழிபாடு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தொழில் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைச் செயலாளர் சக்திவேல், பகுதி செயலாளர் அரசமுத்து, வட்டச் செயலாளர் இருளப்பசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.