தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 16 தேதி பெய்த கனமழையால் பெரியகுளத்தில் உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது இதனால் சாலை முழுவதும் பலத்தை சேதமடைந்தது அதைத் சீரமைப்பு பணியை ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் பார்வையிட்டார்.
இதனால் 18ம் தேதி முதல் பசுவந்தனை ஓட்டப்பிடாரம் கோவில்பட்டியில் இருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது இன்று மழை மற்றும் ஓரளவு தண்ணீர் குறைந்தது அதைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திலிருந்து நீராவி வரை சாலை சீரமைக்கும் பணி தனியார் ஜேசிபி வாகனத்தின் மூலம் நடைபெற்று வருகிறது இன்று அல்லது நாளைக்குள் இந்த பணி முடியும் என தெரிகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.