இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 ஆவது அமைப்பு தினம் கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது, ஏஐடியூசி அலுவலகத்தின் முன்பு உள்ள கட்சியின் கொடிக்கம்பத்தில் மாவட்டச் செயலாளர் கரும்பன் கட்சி கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்,நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இதில் நகர துணைச் செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன்,தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன்,நகர குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, சிதம்பரம்,ராஜு, செந்தில் ஆறுமுகம், தாலுகா குழு உறுப்பினர்கள் சிவராமன், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.