கோவை சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டி அருகே அமைந்துள்ளது புரோஜோன் மால். இங்கு கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஐரோப்பாவில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஐபில் டவர் 50 அடி உயரத்திற்கு அமைக்கப் பட்டுள்ளது. மேலும் புரோஜோன் மால் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்பதற்கு ரம்மியமாக உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது.
கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது.
உலக அதிசயங்களில் ஒன்றான ஐபில் டவர் பாரிஸின் மிகச் சிறந்த அடையாளம் ஆகும் அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்ல் லின் பெயரினால் இது அழைக்கப் படுகின்றது. இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து வருகிறார்கள்.இந்த ஐபில் டவர் கோபரம்
22. 12. 2023 முதல் 10. 01. 2024 வரை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் பாரிஸில் உள்ளது போல் அலங்காரம் செய்யப்படுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.