கோவையில் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகர காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி, கோவை மாநகர ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கான யோகா பயிற்சி இன்று காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இன்று 16.12.23 காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த யோகா வகுப்பு 7.30 மணி வரை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.