கோவை பீளமேட்டில் தன்னாட்சி பெற்ற கல்லூரியான பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பயிலும் பெண்கள், சிறப்பு தொழில் நுட்ப அறிவு பெற்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்,என்ற நோக்கத்தில்,ஏர்கம்பிரசர் தயாரிப்பு நிறுவமான எல்.ஜி. நிறுவனத்துடன் இணைந்து, கல்லூரி வளாகத்தில் ஜி.ஆர்.ஜி-எல்.ஜி. டிஜிட்டல் இன்னோவேசன் டோஜோ என்ற புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது..மாணவிகள் கல்லூரிகளில் பயிலும் போதே வர்த்தக ரீதியான திறன்களை மேம்படுத்தி கொள்ளவும்,வர்த்தக துறையில் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக துவங்கப்பட்ட டோஜா மையத்தின் முதலாம் ஆண்டு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது..ஜி.ஆர்.ஜி. குழும கல்வி மையத்தின் சேர் பெர்சன் டாக்டர் ஆர்.நந்தினி,தலைமையில் நடைபெற்ற விழாவில், எல்.ஜி. எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது பேசிய அவர், மாணவிகள் கல்லூரிகளில் பயிலும் போதே, தொழில்துறையினருடன் இணைந்து பணியாற்றி வர்த்தகம் தொடர்பான அனுபவங்களை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று கூறிய அவர்,வேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்ப உலகில்,புதிய யுக்திகள்,மாற்றி யோசித்தல் போன்ற திறன்களே வெற்றியை தரும் என குறிப்பிட்டார்..தொடர்ந்து ,ஜி.ஆர்.ஜி. மற்றும் எல்.ஜி. டிஜிட்டல் இன்னோவேசன் டோஜோ மையத்தில் செயல்பட்டு சிறந்த திட்டங்களை உருவாக்கிய மாணவிகள் குழுவினருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.. நிகழ்ச்சியில் ஜி.ஆர்.ஜி.கல்லூரியின் இயக்குனர் பேராசிரியர் பாலசுப்ரமணியன், செயலர் யசோதா தேவி,உட்பட மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.