கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரைவுச் சாலையில் வோக்ஸ்வாகன் போலோ கார், ஒத்தக்கால்மண்டபம் மேம்பாலத்தில் இன்று காலை 8:45 மணியளவில் விபத்துக்குள்ளானது.
கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நான்கு பேர் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது.
பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற லாரி மெதுவாக செல்வதை கார் டிரைவர் கவனித்தார், மேலும் விபத்தை தவிர்க்க திடீரென நீண்ட பிரேக் பயன்படுத்தப்பட்டு கார் அதன் கட்டுப்பாட்டை இழந்தது. காரின் முன்சக்கரம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. சம்பவம் அறிந்தவுடன், காரில் இருந்த அனைவரும் உடனே இறங்கி வெளியில் வந்தனர்.
அப்பொழுதே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நொடி பொழுதில் காரின் அனைத்து பகுதியும் மல மலவென தீ பிடித்து எரிய தொடங்கியது. நேரில் கண்ட அனைவரும் கார் தீ பற்றி எரிவதை கண்டு அச்சம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு பின்பு வந்த தீ அணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கார் முற்றிலும் நெருப்பில் எரிந்து கருகியது. எந்த வித உயிர் சேதம் நிகாலாதவாது தீ அணைக்கப்பட்டது.
கோவை – பொள்ளாச்சி செல்வோர் அனைவரும் பாலத்தின் கீழே செல்லும்படி மாற்றி விடப்பட்டனர். சிறிது வேகத்தை குறைத்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று நேரில் கண்டவர்கள் பேசிக்கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மு. ஹரி சங்கர்.