கோவை மாவட்டம் வால்பாறை சிறந்த சுற்றுலா தளமாக விளங்குவதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. விடுமுறை காலங்களில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன இப்படி உள்ள சூழ்நிலையில் வால்பாறை சுற்றிலும் உள்ள பகுதிகளில் கால்நடைகள் சாலையில் உலா வருகின்றன இதனால் வாகன ஓட்டுகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் வாகனங்களுக்கு இடையே கால்நடைகள் திடீரென்று புகுவதால் வாகன ஓட்டிகள் தடுமாறும் சூழ்நிலை ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வால்பாறையை சுற்றியுள்ள பொது வெளி, மார்க்கெட் பகுதி,குப்பை கிடங்கு ,அரசு கல்லூரி பின்புறம், குமரன் சாலை மற்றும் வால்பாறையின் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிகின்றன.
இதனை கருத்தில் கொண்டு வால்பாறை நகராட்சி நிர்வாகம் சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் இந்த சூழ்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரொட்டி கடை பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடித்து கட்டி வைத்தனர் இதனால் கால்நடையின் உரிமையாளருக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் நகராட்சி அதிகாரிகள் கால்நடை உரிமையாளர் மீது காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். கால்நடைகளை வளர்ப்போரும் இது போன்ற பிரச்சனைகளில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வால்பாறை பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டுகள் மற்றும் கால்நடைகளால் விபத்தில் சிக்குவோரின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர் -திவ்யகுமார்.