சிங்கம்புணரி அருகே பி.சி.ஆர் வழக்கு போடுவோமென மிரட்டி பணம் பறிப்பு! புதிய தமிழகம் நிர்வாகி கைது!!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (24) இவருக்கும் இவரின் வீட்டு அருகே உள்ள நபருக்கும் இடையே செப்டம்பர் மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் இருவரும் சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளனர். இது தொடர்பாக காளாப்பூரை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மலைராஜா(35) கொட்டாம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் பாண்டி(32) ஆகியோர் பாண்டியை மிரட்டியதாக கூறப்படுகிறது.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதற்கிடையில் பாண்டி கடந்த 28ஆம் தேதி பாண்டி சிங்கம்புணரி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் மலைராஜா மற்றும் கொட்டாம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் பாண்டி ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த வாய் தகராறு புகார் சம்பந்தமாக மிரட்டி என்னிடம் பணம் கேட்டனர், தரவில்லை என்றால் பி.சி.ஆர் வழக்கு அளித்து உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டினர். இதனால் நான் கடனாக 1லட்சத்து 50 ஆயிரம் வாங்கிக் கொடுத்தேன். இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாண்டியன் புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மலைராஜாவை கைது செய்தனர் தலைமறைவான ரஞ்சித் பாண்டி தேடி வருகின்றனர். பட்டியலின மக்களின் கேடயமாக கருதப்படும் பி.சி.ஆர் பிரிவை தவறாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த இச்சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp