கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 6 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று வால்பாறை வணிகர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
மேலும் மாவட்ட இணை இயக்குனர் அவர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வணிகர் சம்மேளனத்தின் தொகுதி செயலாளர் சரவணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் பொன்மலர், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சிவா மற்றும் நிர்வாகிகள் ஜோதி, மஜித், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் போது மருத்துவமனை நிர்வாகத்திடம் அனைத்து சிகிச்சைகளும் நமது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் அதேசமயம் மருத்துவமனைக்கு வரும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான உரிய சிகிச்சை உரிய நேரத்தில் செய்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டனர் மேலும் எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்து தருகிறோம் என்று வணிகர் சம்மேளனத்தினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம்.வால்பாறை