கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கண்ணாடி மாளிகையை உடைத்து விட்டு சாலையோரம் வியாபாரம் செய்யும் சிறுகுறு வியாபாரிகளுக்கு வணிக கடைகளை அமைக்க பல லட்ச ரூபாய் பொருட்செளவில் கட்டிடம் கட்டப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இந்த கட்டிடம் இதுவரை முழுமை அடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனால் சிறுகுறு வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இது குறித்து வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் அதிகம் வருமானம் வரக்கூடிய நகராட்சியாக வால்பாறை உள்ளது அதுமட்டுமில்லாமல் அதிக அதிகாரிகள், அலுவலர்கள் இருக்கக்கூடிய நகராட்சியும் இதுவே ஆகும் இந்நிலையில் அலுவலர்கள் உட்காருவதற்கு இடமில்லாத நகராட்சியும் இதுவே ஆகும் மேலும் நகராட்சி என்ற கட்டமைப்பு சிறிதும் இல்லாத நகராட்சியாக செயல்படுகிறது இதனால் இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமலும் பல இடங்களில் பல லட்ச ரூபாய் பொருட்செளவில் பல கட்டடங்கள் முழுமை அடையாமலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் உள்ளதால் மிகுந்த வேதனை அளிப்பதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிறுகுறு வியாபாரிகளுக்கு விரைந்து கடைகளை அமைத்துக் கொடுத்தால் வியாபாரிகள் பயன்பெறுவார்கள் மேலும் போக்குவரத்துக்கும் இடையூறாமல் இருக்கும் அதே சமயம் நகராட்சிக்கும் மாதம் வருமானம் வரக்கூடியதாகவும் இருக்கும் இதையெல்லாம் கருத்தில் கொண்டு நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இருப்பதால் மிகுந்த வேதனை அடைவதாக சிறுகுறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறுகுறு வியாபாரிகளின் சார்பாக விரைவில் கண்ணாடி மாளிகையில் கடைகளை திறக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வால்பாறை
-P.பரமசிவம்.